Wednesday, August 22, 2012

Lost love #1


Could not sleep tonight..so much was crossing my mind and suddenly these lines came in a flow thinking about someone..its always best expressed in our mother tongue so this one in thamizh for now.. will translate it sometime soon.


உறக்கத்தை நானாக தள்ளிப்போட்ட இரவுகள் பல உண்டு
இன்றோ என்ன முயற்சித்தாலும் உறங்க முடியவில்லை
எவ்வளவு தான் படுக்கையில் புரண்டாலும்
எத்தனை இறுக்கமாக இமைகளை மூடினாலும்
என் எண்ண அலைகளில்
பிரகாசமாய்,
மின்வெட்டிற்கு பின் மிக வெண்மையாய்
ஒளிரும் மின்விளக்குகள் போல
பளிச்சென்று
உன் (பெரு) உருவம்!!

"லூசே!! கண்கள் மூடினாலும் என் நினைவில் நீதான்
வந்து தொலைக்கின்றாய்" என்று உன் உறக்கம்
கெடுக்கும் விதமாய் அலைபேசியில்
அழைத்து சொல்ல விருப்பம் தான்.

அந்த தருணங்கள் எல்லாம் கடந்து விட்டன
என்று உணர்ந்ததும் உன் உறக்கம் கலைக்கும்
எண்ணமும்
கரை தொட்ட அலை நுரையாக
கரைந்து மறைந்தும்விட்டது.

எனினும் இப்படி தோன்றியது என்று உனக்கு சொல்ல
உன் முகநூளில் என் மன தாளை செருகி வைக்கிறேன்.

படித்து விட்டு "போடி லூசு" என்று திட்டுவதோடு நிறுத்திக்கொள்.
"இவளை இப்படியே விட்டால் எதுவும் பிரெச்சனை கிளம்புமோ"
என்றெல்லாம் முட்டாள்தனமாக யோசித்து என்னை விலக நினைக்காதே

என் ஒரு தலை காதலேனும்  எனக்கு எஞ்சி இருக்கட்டுமே